வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் முத்துப்பேட்டை மண்டல சிறப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை, மார்ச் 24: வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முத்துப்பேட்டையில் நடந்த மண்டல சிறப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேங்க் ஜூவல் அப்ரைவைசர்ஸ் டிரேட் யூனியன் சார்பில் கும்பகோணம் – நாகப்பட்டினம் மண்டல நகை மதிப்பீட்டாளர்கள் கூட்டம் மாநில தலைவர் சீர்காழி சந்தன கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொருளாளர் செந்தில்ராஜ், மாநில துணைத்தலைவர் பாண்டிச்சேரி நர்த்தனராஜா, இணைச் செயலாளர்கள் பட்டுக்கோட்டை அசோகன், வேலூர் கார்த்திகேயன், தஞ்சாவூர் நீலக்கண்ணன், சென்னை வேணுகோபால், செயலாளர் வெங்கடேஷ் ஆலோசகர் திருநெல்வேலி பத்மநாபன், நிர்வாகி திருநெல்வேலி மேகநாதன் ஆகியோர் பேசினார்கள்.

இதில் வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களுக்கு பணி பாதுக்காப்பும், பணி நிரந்தரமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் சங்க வளர்ச்சி போன்ற பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடல் செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் தென்பாதி சம்பந்தம், திருக்காட்டுப்பள்ளி ஐயப்பன், மைக்ரோசாட் சண்முகம் உள்ளிட்டார் கும்பகோணம் நாகப்பட்டினம் மணடலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில் முத்துப்பேட்டை செந்தில்குமார் நன்றி கூறினார்.

The post வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் முத்துப்பேட்டை மண்டல சிறப்பு கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: