தேர்தல் தொடர்பான விளம்பரங்களை மெட்ரோ, வந்தே பாரத் ரயில்களில் இருந்து அகற்ற வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: மெட்ரோ ரயில், வந்தே பாரத் ரயில்களில் உள்ள தேர்தல் தொடர்பான விளம்பரத்தை அகற்ற தேர்தல் ஆணையம் நடவைக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை, தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் என்.ஆர்.இளங்கோ, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் இன்பதுரை, காங்கிரஸ் சார்பில் சந்திரமோகன், எஸ்.கே.நவாஸ், பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன், மாக்சிஸ்ட் கட்சி சார்பில் பீமாராவ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பெரிய சாமி உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் தேமுதிக, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த கருத்துகள் எடுத்துரைக்கபட்டன.

குறிப்பாக, வாக்குவாசடி மையங்களில் தேர்தல் நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள், வாக்குபதிவு இயந்திர கோளாறு, பதற்றமான சூழல் கொண்ட மையங்களில் பாதுகாப்பு உறுதி செய்தல், கூடுதல் ராணுவம், சிசிடிவி கேமரா உள்ளிட்ட பாதுகாப்பான நடைமுறைகளை தேர்தலை நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த கூட்டத்தின் வாயிலாக முன்வைக்க பட்டது. கூட்டத்துக்கு பிறகு திமுக – அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி: மெட்ரோ ரயில், வந்தே பாரத் ரயிலில் விளம்பரங்கள் அகற்றப்படாமல் உள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டோம். மேலும், கல்யாண செலவு உள்ளிட்டவைகளுக்கான எடுத்துச்செல்லப்படும் பணத்தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்கின்றனர். அதுபோல, பறிமுதல் செய்யப்படும் பணத்தை உடனடியாக ஆணவங்களை காண்பித்த உடனே பொதுமக்களுக்கு எந்த இடையூறுமின்றி அவர்களிடம் தர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டோம் என்றார்.

The post தேர்தல் தொடர்பான விளம்பரங்களை மெட்ரோ, வந்தே பாரத் ரயில்களில் இருந்து அகற்ற வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: