மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக துண்டு பிரசுரங்கள் வினியோகம்

கோத்தகிரி : மலை மாவட்ட சிறுவிவசாய சங்கத்தினர் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாததால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கோத்தகிரியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மலை மாவட்ட சிறுவிவசாய சங்கத்தினர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். கடந்த 30 ஆண்டுகளாக பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாததால், தேயிலை விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பசுந்தேயிலையின் விலை வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு மத்திய,மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும், தீர்வும் எடுக்கவில்லை.

இது சம்மந்தமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவில் உள்ள மலை மாவட்ட சிறுவிவசாய சங்கத்தின் முக்கிய தலைவர்களும், பசுந்தேயிலை விவசாய பிரதிநிதிகளும் ஒன்று சேர்த்து தனியார் மண்டபத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களான பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு கிலோ தேயிலை தூளுக்கு ரூ.200, தனியார் தேயிலை தொழிற்சாலைகள் சில்லறை வர்த்தகத்தில் தேயிலைத்தூள் விற்கக்கூடாது.

தனியார் தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூளை ஏல மையத்திற்கு கொண்டு வர வேண்டும். இவற்றை நிறைவேற்றாததால் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என அச்சிடப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை கோத்தகிரி நகரில் உள்ள வணிக நிறுவனங்கள்,பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு நேற்று விநியோகம் செய்தனர்.

The post மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் appeared first on Dinakaran.

Related Stories: