போளூர் அருகே துரிஞ்சிகுப்பத்தில் துரியோதனன் படுகளம், தீமிதி விழா

*திரளான பக்தர்கள் பங்கேற்பு

போளூர் : போளூர் அருகே துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் துரியோதனன் படுகளம், தீமிதி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் சார்பில் அக்னி வசந்த மகோற்சவ பெருவிழா கடந்த மாதம் 1ம் தேதி தொடங்கியது. அதனை முன்னிட்டு கொடியேற்றி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

அன்று முதல் மகாபாரத சொற்பொழிவு தினமும் நடந்தது. அதனை தொடர்ந்து 1ம் தேதி முதல் விநாயகர் சிறப்பும் வியாசர் சிறப்பும், கண் இல்லாதவன் உடன் இரு காளையர் தோற்றம், வில் வளைத்தலும், வீரணை மணத்தலும், மாதவன் கையில் மாலா துகில், விள்வளைப்பு, பகடைதுகில், குறவஞ்சி, கிருஷ்ணன் தூது, அரவாண் களபலி, கண்ணன் மோட்சம், அசகாய சூரன், வீரஅபிமன்னன்போர், கண்ணன் மோட்சம் நாடகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று காலை திரவுபதி அம்மன் கோயிலில் முன் துரியோதனன் படுகளம் நடந்தது. மாலை கிராம பொதுமக்கள் சார்பில் தீமிதி விழா நடந்தது. பக்தர்கள் தீமிதித்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தி அம்மனை திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டி வணங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் ப.பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் பா.ஆர்த்திபாஸ்கரன், துணை தலைவர் க.செல்வரசு, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ப.ஸ்ரீதேவிபழனி மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post போளூர் அருகே துரிஞ்சிகுப்பத்தில் துரியோதனன் படுகளம், தீமிதி விழா appeared first on Dinakaran.

Related Stories: