பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் திடீர் திருப்பம் 2 குற்றவாளிகள் சென்னை லாட்ஜில் தங்கி இருந்தது கண்டுபிடிப்பு: தொப்பி மூலம் துப்பு துலங்கியதாக என்ஐஏ தகவல்

 

சென்னை, மார்ச் 23: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 2 பேர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தது, கைப்பற்றப்பட்ட தொப்பி மூலம் துப்பு துலங்கியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தனர். இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான சில பொருட்களும் தடயவியல் நிபுணர்கள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இந்த குண்டு சம்பவத்தின் பின்னணியில் பல மர்மங்கள் நீடித்ததால் இந்த வழக்கு பெங்களூரு காவல்துறையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)வுக்கு மாற்றப்பட்டது. அதன்படி என்ஐஏ அதிகாரிகள் குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். அப்போது, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மூலம், குறிப்பாக குற்றவாளிகள் பயன்படுத்திய தொப்பி ஒன்று மூலம் துப்பு துலங்கியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ராமேஸ்வரம் கபே உணவகத்தில் குண்டு வைத்து சென்ற நபர் மற்றும் அதற்கு உதவியதாக கூறப்படும் நபர், கடந்த 2022ம் ஆண்டு பெங்களூருவில் சதிச்செயலில் ஈடுபட்டதாக முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா என தெரியவந்துள்ளது. இருவரும் அப்போதே தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ அறிவித்து இருந்தது தெரியவந்தது.

மேலும், பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா ஆகியோர், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதில் முஸவீர் ஹூசைன் ஷாகிப் அணிந்து இருந்த தொப்பி சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் வாங்கியதும், வெடிகுண்டு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட தொப்பி மூலமே இந்த வழக்கில் துப்புதுலங்க உதவியாக இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருவரும் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து பெங்களூருவில் இருந்து கேரளா வழியாக தமிழகம் வந்து பிறகு சென்னை வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி சென்றதாக விசாரணை மூலம் உறுதியாகியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் திடீர் திருப்பம் 2 குற்றவாளிகள் சென்னை லாட்ஜில் தங்கி இருந்தது கண்டுபிடிப்பு: தொப்பி மூலம் துப்பு துலங்கியதாக என்ஐஏ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: