×

இன்விஸிபிள் ஹேர் எக்ஸ்டென்ஷன்…

நன்றி குங்குமம் தோழி

முடி இல்லை என்பவருக்கு தீர்வு!

“முடி எனக்கு சுத்தமாக வளரவே மாட்டேங்குது. முடி வளர்ச்சி எனக்கு ஸ்டாப் ஆயிடுச்சு. அடர்த்தி கம்மியா எலி வாலு மாதிரி இருக்கு. என்னோட ஸ்கால்ப்((Scalp) விஸிபிளா வெளியில் தெரியுது. வெளிய போகவே எனக்கு வெட்கமாக இருக்கு…” இவையெல்லாம் இன்றைய இளம் பெண்களின் புலம்பல்ஸ். எவ்வளவு அழகான உடை உடுத்தினாலும், முடி வளர்ச்சி இல்லாத பெண்கள் வருத்தம் அடைகின்றனர். அதேபோல் திருமணம் ஆகப்போகிற பெண்ணிற்கு சரியான முடி வளர்ச்சி இல்லையெனில், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றார்.

70 சதவிகிதம் பெண்கள், ‘‘திருமணமாகி குழந்தை பிறந்ததும் முடியெல்லாம் கொட்டீருச்சு… என்ன செய்தாலும் வளரல… என் பழைய லுக் இப்ப இல்ல’’ என வருத்தப்படுவார்கள். இன்னும் சிலர் ‘‘திறமை இருந்தும் செலிபிரேட்டியாக மாற முடி வளர்ச்சி இன்மை மனத்தடையாக இருக்கு’’ என்கிறார்கள். உடன் பணிபுரிபவர்கள் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வேலையை விட்ட பெண்களும் இதில் அடக்கம்.

முடி வளர்ச்சி இல்லாமல் மென்டல் டென்ஷனாகும் பெண்கள் முடியினை வளர வைக்கும் முயற்சிகளை தொடர்ந்து செய்வார்கள். 1 வருடம், 2 வருடம், 3 வருடம் கடந்தாலும் அவர்களுக்கு முடியே வளராது. போலியான விளம்பரங்களை நம்பி 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவு செய்த பெண்களும் இருக்கிறார்கள்.‘‘முடியை வளர வைப்பது அவ்வளவு எளிதல்ல’’ என்கிற அழகுக்கலை நிபுணர் வாசவி, ‘‘அதற்குப் பதிலாக ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்வதன் மூலமாக 50 சதவிகிதமாக இருக்கும் கூந்தலை 100 சதவிகிதமாகவும் 200 சதவிகிதமாகவும் மாற்றி, முடியின் தோற்றத்தை நீளமாகவும், அடர்த்தியாகவும் நிரந்தரத் தீர்வாக என்னால் கொடுக்க முடியும்’’ என, முடி வளர்ச்சி பிரச்னைக்கு நம்பிக்கை கொடுக்கிறார் இவர். ஸ்டைலைட் ப்யூட்டி என்கிற பெயரில் ஈரோட்டில் பெர்மெனன்ட் ஹேர் எக்ஸ்டென்ஷன் தொழிலைச் செய்து பிரபலமடைந்த வாசவியிடம் மேலும் பேசியதில்…

‘‘ஹேர் டூ ஹேர் அட்டாச் செய்வதால் பின்பக்க கூந்தல் மட்டுமல்ல, 360 டிகிரியிலும் முடியின் லுக்கை நிரந்தரமாக்க முடியும்’’ என மேலும் நம்பிக்கை கொடுப்பவர், ‘‘இது
என்னுடைய நீண்டநாள் கனவு. முதலில் ப்யூட்டி பார்லரைதான் தொடங்கி நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் பலரும், எனக்கு முடி நிறைய கொட்டுது. முடி வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்கிற கேள்வியை அடிக்கடி கேட்க ஆரம்பித்தனர். ஆயில் மசாஜ், ஹேர் ஸ்பா போன்றவற்றைச் செய்வதால் முடி வளர்ந்துவிடாது. முடி வளர்ச்சிக்கு உடல் ரீதியான சப்போர்ட் மற்றும் முடியில் இருக்கும் பாலிக்கல்ஸ் ஹெல்த்தியானதாய் இருக்க வேண்டும். கூடவே முடி வளர்ச்சி லக்கான விஷயம் ஆகும். அமைந்தால் அமையும். இல்லை என்றால் இல்லை. இந்த விஷயத்தில் எனது வாடிக்கையாளர்களை என்னால் திருப்திபடுத்த முடியாமலே இருந்தது.

முடி வளர்ச்சியே இல்லாதவர்களுக்கு என்ன பண்ணலாம் என முயற்சித்ததில், அது தொடர்பான தேடல்கள் எனக்கு அதிகமானது’’ என்றவர், ஹேர் டூ ஹேர், இன்விஸிபிள் எக்ஸ்டென்ஷன் டெக்னாலஜியை, தான் தேடிக் கண்டுபிடித்த முறையை நம்மிடம் ஆர்வமாக விவரிக்க ஆரம்பித்தார்.‘‘ஹேர் எக்ஸ்டென்ஷன் என்பது கடந்த 15 ஆண்டுகளாக இருக்கும் ஒரு முறைதான். இதில் பேஸிக் டெக்னாலஜி, அட்வான்ஸ், பிரீமியம் என மூன்று முறைகள் இருக்கிறது. இதில் பேஸிக் டெக்னாலஜி ரிங் இணைத்து செய்யப்படுகிற முறை.

இதில் ரிங் அளவு 7 எம்.எம், 5 எம்.எம் என குறைந்து, தற்போது 2 எம்.எம் அளவுகளில் குட்டியாகக் கிடைக்கிறது. 70 சதவிகிதம் வாடிக்கையாளர் இந்த 2 எம்.எம் ரிங் எக்ஸ்டென்ஷனில் திருப்தி அடைகின்றனர். ஆனால் இந்த டெக்னாலஜி மூலம் 100 அல்லது 150 கிராம் முடிகளை மட்டுமே இணைக்க முடியும். இதில் வெயிட்டை கொஞ்சமாக உணர முடியும். அடுத்தது அட்வான்ஸ் முறை. இது பெரிய வடிவ கேப்ஷூல்ஸ் பயன்படுத்தி இணைக்கப்படும் ஹேர் எக்ஸ்டென்ஷன் முறை.

மீதியுள்ள 30 சதவிகிதம் வி.ஐ.பி அல்லது செலிபிரேட்டி அல்லது தொழிலதிபர், வாடிக்கையாளர்களுக்காகவே, ரிங் மற்றும் கேப்ஷூல்ஸ் இல்லாத பெஸ்ட் எக்ஸ்டென்ஷன் இருக்கிறதா எனத் தேட ஆரம்பித்து, அது உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சியினை தீவிரமாக எடுத்தேன். அப்போதுதான் இதில் லேட்டஸ்ட் டெக்னாலஜியாக பிரீமியம் இன்விஸிபிள் கேப்ஷூல் டெக்னாலஜி இருப்பது தெரிய வந்தது. ஆனால் ரஷ்யா நாட்டில் மட்டுமே இது பயன்பாட்டில் இருந்தது. வெரையா என்கிற ரஷ்யப் பெண்மணி 20 வருடங்களுக்கு முன்பே இன்விஸிபிள் ஹேர் எக்ஸ்டென்ஷனை கண்டுபிடித்து சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

மேடம் வெரையாவிடம் இதற்கென ஆன்லைன் வகுப்புகள் இருந்தும், A to Z விஷயங்களை நேரில் கற்றால்தான், வாடிக்கையாளர்களை நம்பிக்கையுடன் திருப்திபடுத்த முடியும் என முடிவு செய்து, துபாய் நாட்டில் இருக்கும் அவருடைய VEREYA Hair academyல் மாணவியாக இணைந்து முறையான பயிற்சிகளைப் பெற்று, சான்றிதழும் பெற்றிருக்கிறார்.

இந்தியாவுக்கு முதன் முதலாக பிரிமியம் இன்விஸிபிள் எக்ஸ்டென்ஷன் டெக்னாலஜியை நான்தான் கொண்டு வந்திருக்கிறேன்’’ என்கிறார் வாசவி நம்பிக்கையுடன் விரல் உயர்த்தி, முகமெல்லாம் புன்னகைத்து.‘‘5 முடியுடன் 10 முடியினை இணைக்கும்போது இன்விஸிபிளாய் ஜெல் வைப்போம். அது முடியோடு முடியாய் கலந்து, பெர்ஃபெக்ட் லுக்கில் கூந்தல் இருக்கும். ஒரே கலர், ஒரே டெக்ஷர்(texture) என கூந்தல் அழகாகத் தெரியும். நீள முடி(straight hair), அலை அலையான முடி(wavல hair), சுருள் முடி(curly hair) என விரும்பியதை எவ்வளவு வால்யூம் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் நீள முடி கொண்டவர்கள் சுருள் முடியினை இணைக்கலாம். இந்த டெக்னாலஜியில் இன்டேக் கிடையாது.

கெமிக்கல் பயன்படுத்துவதும் இல்லை. முக்கியமாக ஸ்கால்ப்பில் கை வைப்பதில்லை. வாடிக்கையாளர் எப்போதும் போல ஆயில் வைத்து நார்மலான ஷேம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி கூந்தலை அலசலாம். 6 முதல் 8 மாதத்திற்குப் பிறகே ரீ பிக்ஸிங் செய்ய தயாராக வேண்டும்.எக்ஸ்டென்ஷனுக்காக நாங்கள் பயன்படுத்துகிற முடிகள் அனைத்தும் சிங்கிள் டோனர்ஸ் ஹூயூமன் ஹேர்ஸ். திருப்பதி கோயிலில் காணிக்கையாக வரும் முடிகளை ஏலத்தில் எடுத்து வந்து, அவற்றை சுத்தம் செய்து, தேவையான வால்யூம், கலர், லெங்த், டெக்ஷர் என பிரிப்போம். இதற்கென தொழிற்சாலை எங்களுக்கு ஆந்திராவில் செயல்படுகிறது.

எப்போதும் போல் ஸ்டெயிட்டனிங், ஸ்மூத்தனிங், கரோட்டின் போன்ற சலூன் சர்வீஸ்களை எந்தத் தயக்கமும் இன்றி எடுக்கலாம். ரூட் டச், கலரிங், ஹேர் டிரீட்மென்ட் என எல்லாமும் செய்து கொள்ளலாம். இதற்கெல்லாம் எந்தத் தடையும் கிடையாது.சமூக வலைத்தளங்கள் வழியே நாங்கள் வழங்கும் இன்விஸிபிள் ஹேர் எக்ஸ்டென்ஷன் சேவையை பார்க்கும் வாடிக்கையாளர்கள் ரொம்பவே மெனக்கெட்டு மாநிலங்கள் தாண்டி எங்களைத் தேடி கரூர் வருகிறார்கள். சென்னையில் இருக்கிற செலிபிரேட்டி கஸ்டமர்களும் எங்கள் சேவையை தேடி கரூர் நோக்கி வருகின்றனர்.

டெல்லி, குஜராத், பூனே, மும்பை, ஹைதராபாத், ஆந்திரா, உடுப்பி, ஜெய்ப்பூர், மைசூர், கேரளா என அனைத்து இடங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் தினமும் வருகிறது. அவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் எங்கள் சேவைகளை விளக்குவதுடன், எவ்வளவு முடி அவர்களுக்கு இருக்கிறது, என்ன மாதிரியான கூந்தல் அமைப்பு தேவை என்பதை புகைப்படம் வழியாகப் பார்த்து முடிவு செய்கிறோம். அவர்கள் ஓ.கே. ஆனதும், தேவையான முடிகளை தயார் செய்து ஸ்டாக் செய்த பிறகே, கரூரில் உள்ள எங்கள் ஸ்டுடியோவுக்கு நேரில் வரவழைப்போம்’’ என்றவாறே புன்னகையுடன் விடை கொடுத்தார்.

நான் எல்எல்பி படித்த அட்வகேட்…

‘‘எனக்கு ஊர் ஆந்திர மாநிலம் கடப்பா. வழக்கறிஞருக்கு படிச்சேன். திருமணத்திற்குப் பிறகு தமிழகத்தில் நிரந்தரமாக வாழவேண்டிய சூழல். தாய்மொழி எனக்கு தெலுங்கு என்பதால் தமிழ் சுத்தமாகத் தெரியாது. மொழி பிரச்னையால் நான் படித்த வழக்கறிஞர் வேலைக்கும் போக முடியவில்லை. தமிழ்நாட்டில் என்ன செய்யப்போகிறேன் என்கிற குழப்பம் இருந்தது. பொருளாதாரத் தேவைக்கு அப்பாவிடமோ, கணவரிடமோ கையேந்தக்கூடாது என்பதில் மட்டும் உறுதி காட்டினேன்.

சின்ன வயதில் கிரியேட்டிவிட்டி பக்கமும் ஆர்வம் இருந்தது. அழகுக்கலை நிபுணர் ஒருவர் மூலமாக அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டு, எங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பெண்களுக்கு ஃபேஷியல், த்ரெட்டிங் போன்றவற்றை வருமானத்திற்காக டோர் ஸ்டெப்பாக செய்து கொண்டிருந்தேன். என் சேவையில் 100 சதவிகிதமும் கஷ்டமர் சாட்டிஸ்பேக்ஷன் இருந்ததால், புராடெக்ட் நாலேஜ் பெற புரொபஷனல் ப்யூட்டீஷியன் கோர்ஸில் இணைய சென்னை வந்தேன். விடுதியில் தங்கி 3 மாதம் பயிற்சி எடுத்ததில் தமிழ் சரளமாகப் பேச வந்தது. பிறகு திருவனந்தபுரத்தில் தங்கி இன்டர்நேஷனல் லெவலில் அழகுக்கலை குறித்த பயிற்சிகளை எடுத்ததில் எளிமையான டெக்னிக்ஸ் பலவற்றை சொல்லிக் கொடுத்தார்கள்.

நம்பிக்கையோடு வீட்டிலேயே சலூன் அமைத்து தொழிலைத் தொடங்கினேன். என்னுடைய சர்வீஸ் அனைத்தும் சிறப்பாக இருப்பதாகச் சொல்லி வாடிக்கையாளர்கள் என்னைத் தேடிவர ஆரம்பித்தனர். வாடிக்கையாளர் அதிகமானதும், கரூரின் முக்கிய இடத்தில் சொந்தமாக சலூன் அமைத்து பிரான்டெட் சர்வீஸ்களை சிறப்பாகவே கொடுத்து வருகிறேன்.’’

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆர்.சோமசுந்தரம்

The post இன்விஸிபிள் ஹேர் எக்ஸ்டென்ஷன்… appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...