×

சப்பாத்தியை சுவையாக்க!

நன்றி குங்குமம் தோழி

சப்பாத்தியை சுவையாக்க!

*நீருடன் மோர், மிளகு, சீரகப்பொடி, உப்பு கலந்து கோதுமை மாவைப் பிசைந்தால் சுவையாக இருக்கும்.

*சப்பாத்தி மாவில் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை, மணம் கூடி விடும்.

*வெந்நீர் அல்லது சூடான பாலை நீருடன் கலந்து மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக, சுவையாக இருக்கும்.

*ஒரு பங்கு கோதுமை மாவுக்கு பாதிப் பங்கு நீரை கொதிக்க வைத்து, அதில் மாவை தூவி, கை விடாமல் கிளறினால் மாவு வெந்து சப்பாத்தி இட எளிதாக இருக்கும். கைவலிக்காது. சப்பாத்தியும் மென்மையாக வரும்.

*கோதுமை மாவுடன் சம பங்கு பார்லி மாவு கலந்து பிசைந்தால் சுவை கூடி மிருதுவாகவும் சப்பாத்தி வரும்.

*கோதுமை மாவில் தண்ணீருக்கு பதிலாக இளநீர் கலக்கலாம்.

*தயிர் கலந்து மாவைப் பிசைந்தால் சப்பாத்தி சுவை கூடி விடும்.

*சப்பாத்தி மாவில் ஏலக்காய் பொடி, சுக்குத்தூள் சிறிது கலந்தால் சுவையும், மணமும் கூடி விடும். எளிதில் ஜீரணமாகும்.

*பிசைந்த மாவை மூடிய பாத்திரத்தில் அரைமணி நேரம் வைத்து ஊற விட்டால் சப்பாத்தி மென்மையாக இருக்கும். காற்று பட்டால் மாவு வறண்டு, சப்பாத்தி சரியாக இடமுடியாது. சோடா உப்பு சேர்க்க தேவையில்லை.

– ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

ஒவ்வாமை அலர்ஜியிலிருந்து விடுபெறுவது எப்படி?

தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கு அடைப்பு, மூக்கு அரிப்பு, வறட்டு இருமல், ஆஸ்துமா, நெஞ்சு இறக்கம், சுவாசத்தில் விசில் சத்தம் கேட்பது அலர்ஜியின் எதிரொலி. அலர்ஜி ஏற்பட்டால், கண்களில் நீர்வடிதல், எரிச்சல் கண்கள் சிவப்பது, இமைகள் வீங்குவது போன்றவை அதன் அறிகுறிகளாகும்.

*அலர்ஜி உள்ளவர்கள் எந்த ஒரு பிராணியையும் வீட்டில் வளர்க்காமல் இருப்பதே நல்லது.

*பூனை, நாய், முயல், கிளி போன்றவற்றைத் தொட்டுத் தூக்குவது, முத்தம் கொடுப்பது கூடாது.

*வீட்டைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

*வீட்டுச்சுவர்கள் மற்றும் ஜன்னல் கம்பிகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.

*படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை வாரம் ஒருமுறை வெந்நீரில் ஊற வைத்து, அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

*திரைச்சீலைகளை அடிக்கடி மாற்ற வேண்டும்.

*படுக்கை அறையில் தட்டு முட்டுச் சாமான்களை வெட்டியாக அடுக்கி வைக்கக் கூடாது.

*அடுக்கு மாடியில் வசிப்போர்களுக்கு அலர்ஜி நோய்கள் ஏற்பட கரப்பான் பூச்சிகள் தான் முக்கிய காரணம்.

*வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை சுகாதார முறைப்படி மூடி பாதுகாப்பதன் மூலம், கரப்பான் பூச்சி பெருகி வருவதைத் தடுக்க முடியும்.

*மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து வீட்டைச் சுத்தப்படுத்துவது அவசியம்.

*வளர்ந்த நாடுகளில் வளர்ப்பு பிராணிகளால் அலர்ஜி ஏற்படாமலிருக்க தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள்.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

The post சப்பாத்தியை சுவையாக்க! appeared first on Dinakaran.

Tags : kumkum ,
× RELATED கோடைகால குழந்தைகள் பராமரிப்பு!