வாழைப்பழம் எல்லோரும் சாப்பிடலாமா…

நன்றி குங்குமம் டாக்டர்

எல்லா பருவ காலங்களிலும் எல்லா இடங்களிலும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரே பழம் வாழைப்பழம்தான். வாழைப்பழத்தில் வைட்டமின்கள், பொட்டாசியம், மினரல்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கின்றன. மேலும், வாழைப்பழத்தில் கலோரிகள் அளவும் மிக மிக அதிகம்.இத்தனை ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் இருந்தாலும் வாழைப்பழம் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக சில உடல்நல பாதிப்புகள் இருப்பவர்கள் கட்டாயம் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும். அப்படி யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.

வாழைப்பழம் அதிகமாக சாப்பிடும்போது பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக பல் சொத்தையை ஏற்படுத்தும். அதனால் பல் கூச்சம், பல் ஈறுகளில் வலி போன்றவை இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.ஒரு நாளைக்கு ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாழைப்பழங்கள் எடுத்துக் கொள்வதால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பழம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள். ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம், இரவு உணவில் கலோரிகள் குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.வாழைப்பழத்தில் பொட்டாசியமும் நார்ச்சத்துக்களும் மிக அதிக அளவில் இருக்கின்றன. இது வாயுத் தொல்லையை ஏற்படுத்துவதோடு வயிறு எப்போதும் உப்பசமாக இருப்பது போல தோன்றும். அதனால் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் வாழைப்பழம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

வாழைப்பழத்தில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டும் ஃபிரக்டோசும் உள்ளதால் அதிகமாக வாழைப்பழம் எடுத்துக் கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். நீரிழிவை அதிகரிக்கும். எனவே, நீரிழிவு பிரச்னை இருப்பவர்கள் வாழைப்பழத்தைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.சிலர் அடிக்கடி ஒற்றைத் தலைவலி பிரச்னையால் அவதிப்படுவார்கள். அவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது இன்னும் தலைவலியை அதிகப்படுத்தி விடும்.

ஒரு வாழைப்பழத்தில் மட்டும் கிட்டதட்ட 60 கலோரிக்கும் மேல் இருக்கிறது. அதனால் அதிகமாக வாழைப்பழங்கள் எடுத்துக் கொள்ளும்போது உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் உடல் பருமன் உள்ளவர்களும் வாழைப்பழம் உட்கொள்வதைத் தவிர்ப்பது மிக முக்கியம்.வாழைப்பழம் மலமிளக்கியாகச் செயல்படுவதால் தினமும் இரவில் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு தூங்கும் பழக்கம் உடையவர்களை பார்த்திருப்போம். ஆனால் வாழைப்பழம் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, அதில் அதிகப்படியாக நார்ச்சத்துக்கள் இருப்பதால் அது மலச்சிக்கலை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும்.வாழைப்பழம் ஆரோக்கியமானது என்பதற்காக தினமும் எடுத்துக் கொள்வதோ அல்லது அதிகமாக எடுத்துக் கொள்வதோ கூடாது.

தொகுப்பு: தவநிதி

The post வாழைப்பழம் எல்லோரும் சாப்பிடலாமா… appeared first on Dinakaran.

Related Stories: