பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டில் ஜூலை மாதம் பெய்த தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழவு செய்து அதில் தக்காளி சாகுபடி செய்தனர்.

சுற்றுவட்டார கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டு நன்கு விளைச்சல் அடைந்த தக்காளிகள் நவம்பர் மாதம் அறுவடை தீவிரமானது. இதனால் அச்சமயத்தில், மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து, விலை சரிய துவங்கியது. கடந்த பல வாரமாக 1 கிலோ தக்காளி ரூ.8 முதல் 10 வரை மட்டுமே விற்பனையானது. அதன்பின் சில வாரத்தில் மீண்டும் தக்காளி சாகுபடியால், அந்நேரத்தில் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து, 1 கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை என விலை அதிகரித்தது.

இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 3 மாதத்திற்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட தக்காளிகள் அறுவடை நிறைவடையும் நிலையில் உள்ளது. மேலும், வெயிலின் தாக்கத்தால் பல இடங்களில் தக்காளி விரைந்து பழுத்த நிலையடைவதால், அதனையும் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பும் பணி நடக்கிறது. அதுமட்டுமின்றி, ஒட்டன் சத்திரம், பழனி, திண்டுக்கல் பகுதியிலிருந்து மட்டும் ஓரளவு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. கடந்த சில வாரமாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து ஏற்றம் இறக்கத்தால், கடந்த மாதம் ஒருகிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலை தற்போதும் தொடர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: