அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடைபெறும் : இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: அருணாச்சலப்பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 4-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2-ம் தேதியே வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2-ம் தேதியே முடிவடைவதால் வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

நேற்று மாலை 3 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டனர். இதில், 543 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் அறிவித்தார். இதுமட்டுமின்றி 13 மாநிலங்களில் தற்போது காலியாக உள்ள 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையர் கூறினார்.

ஜூன் 4ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2-ம் தேதியே முடிவடைவதால் வாக்கு எண்ணிக்கையை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

The post அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடைபெறும் : இந்திய தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: