வைப்பார் மல்லம்மாள் கோயில் திருவிழா

*வைப்பாற்றில் புனிதநீர் எடுத்து சென்ற பக்தர்கள்

குளத்தூர் : வைப்பார் மல்லம்மாள் கோயில் திருவிழாவில் பொங்கல் வைப்பதற்காக பக்தர்கள் வைப்பாற்றில் இருந்து புனிதநீர் எடுத்துச் சென்றனர்.தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ள வைப்பார் கிராமத்தில் மல்லம்மாள் கோயில் திருவிழா, 2 வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதம் சிவராத்திரி தினத்தன்று ஆரம்பித்து ஒருவார காலம் நடைபெறும். இந்தாண்டு கடந்த 8ம் தேதி காலை அருகில் உள்ள சிப்பிக்குளம் கடலுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி தீர்த்தக் குடங்களில் புனிதநீர் எடுத்து வந்தனர்.

அவர்களை ஊர் பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகளுடன் பூஜைகள் நடத்தப்பட்டது.நேற்று முன்தினம் மாலை கோயில் முன்பு பொங்கலிடுவதற்க்காக ஒரே வகையறாவைச் சேர்ந்த 700க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் வைப்பாற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வந்து கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர்.

தொடர்ந்து நேர்ச்சையாக விடப்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதல்களை செலுத்தினர். மேலும் பெண்களின் கும்மியாட்டம், வில்லுப்பாட்டு, என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post வைப்பார் மல்லம்மாள் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: