பேர்ப்ரோ 2024 வருடாந்திர சொத்து ரியல் எஸ்டேட் கண்காட்சி: கிரெடாய் சென்னை சார்பில் துவக்கம்

சென்னை: கிரெடாய் சென்னை சார்பில் சென்னையில் பேர்ப்ரோ 2024 வருடாந்திர சொத்து ரியல் எஸ்டேட் கண்காட்சி நேற்று துவங்கியது. கிரெடாய் சென்னை சார்பில் நடத்தப்படும் 16வது பேர்ப்ரோ 2024 ஆண்டு சொத்து ரியல் எஸ்டேட் கண்காட்சியை விளம்பர தூதர்கள் நடிகைகள் சுஹாசினி மணிரத்னம் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 3.25 கோடி சதுர அடி குடியிருப்புகள், 2.5 லட்சம் சதுரஅடி வணிக இடங்கள், 325 ஏக்கர் மனைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்ப்பட்ட திட்டங்கள் வருங்கால சொத்து வாங்குபவர்களுக்காக காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு கண்காட்சியில் வீடுகள் ரூ.15 லட்சம் முதல் ரூ.15 கோடி வரை இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சியில் சொத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியில் பங்கேற்று பரிசாக ரூ.1 லட்சம் வீதம் மூன்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கிரெடாய் பேர்ப்ரோ செயலியில் கண்காட்சி தகவல்களை அறியலாம்.

The post பேர்ப்ரோ 2024 வருடாந்திர சொத்து ரியல் எஸ்டேட் கண்காட்சி: கிரெடாய் சென்னை சார்பில் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: