மரபணுக்களை ஒன்றிணைத்தல் பயிற்சி

செய்துங்கநல்லூர், மார்ச் 6: வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் வஉசி வேளாண்மை கல்லூரியில் அறிவியல், தொழில்நுட்பத்துறை மற்றும் இந்திய அரசு இணைந்து குறியீட்டு உதவியுடன் மரபணுக்களை ஒன்றிணைத்தல் ஆசிரியர் பயிற்சி பட்டறையை 2 நாட்கள் நடத்தியது. இதில் தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளை சேர்ந்த 20 பேராசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சியை கிள்ளிகுளம் கல்லூரி முதல்வர் தேரடி மணி துவக்கி வைத்தார். பனை மற்றும் வாழை ஆராய்ச்சி நிலைய சிறப்பு அதிகாரி ஸ்வர்ணபிரியா பேசினார். பயிர் மரபியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ஜூலியட் ஹெப்சிபா வரவேற்றார். பயிற்சியின் தலைப்புக்கேற்ற விரிவுரைகள், நடைமுறை அமர்வுகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றது. பயிர் பெருக்கம் இணை பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

The post மரபணுக்களை ஒன்றிணைத்தல் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: