சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கோரிக்கை

 

மண்டபம்,மார்ச் 6: உச்சிப்புளி அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அந்த பகுதியை கடந்து செல்ல சிரமப்பட்டு மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். மண்டபம் ஒன்றியம் என் மனங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி புது நகரம் தெரு ஆகும். இந்த தெருப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தெருக் குழாய் குடிநீர் பைப் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைப்பில் இருந்து தண்ணீர் வடிந்து சாலையில் பள்ளமான பகுதிகளில் சென்று தேங்கி விட்டது. இந்த தேக்கமான நீர் பல மாதங்களாக இருப்பதால் நீரின் நிரம் மாறி பிளாஸ்டிக் பேப்பர் மரம் இலைகள் மற்றும் தூசிகள்,சாலையில் பரந்து வரும் கழிவு பேப்பர்கள் சேர்ந்து சிதைந்து நீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசிகிறது. மேலும் கொசுக்கள் உருவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலத்தில் விஷக்காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் தொற்று நோய் பரவி, மேலும் அந்த பகுதியில் விஷக்காய்ச்சள் பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் உடனடியாக சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: