×

அனுப்பர்பாளையம் பகுதியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

 

திருப்பூர், மார்ச் 5: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பூர் மாநகரில் துணை ராணுவத்தினர் தேர்தல் விழிப்புணர்வு, மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காக கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் சரக எல்லைப்பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வந்து வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் துணை ராணுவத்தினர் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு நேற்று மாலை நடைபெற்றது.

இந்த கொடி அணிவகுப்புற்கு அனுப்பர்பாளையன் சரக உதவி கமிஷனர் நல்லசிவம் தலைமை வகித்தார். அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் லதா, திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் 53 துணை ராணுவத்தினர் உள்பட 80 பேர் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பு பெருமாநல்லூர் ரோடு போயம்பாளையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து அவிநாசி கவுண்டம்பாளையத்தில் நிறைவு பெற்றது.

The post அனுப்பர்பாளையம் பகுதியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Paramilitary flag parade ,Pattarpalayam ,Tirupur ,flag ,flag parade ,
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு