×

5 விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கனி விற்பனை வண்டி வழங்கல்

 

உடுமலை, மார்ச் 5: மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக பல்வேறு மானியத் திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் விவசாயி கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நடமாடும் காய் கனி விற்பனை வண்டி 50 சதவீதம் மானியத்தில் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் ஆதிதிராவிட விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த காய்கனி விற்பனை வண்டிகள் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்பதற்கும், ஏழை வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற் கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகளை பெறுவதற்கு ஏற்கனவே பதிவு செய்த ஐந்து நபர்களுக்கு 1 வண்டி ரூபாய் 15,000 மானியத்தில், ஐந்து வண்டிகள் ரூபாய் 75,000 தோட்டக்கலை துறை மூலம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 5 விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கனி விற்பனை வண்டி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Madathikulam District ,Horticulture Assistant Director ,Suresh Kumar ,
× RELATED வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் உடுமலை மத்திய பேருந்து நிலையம்