வேலைவாய்ப்புகளின் மூடிய கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும்: காங். எம்பி ராகுல்காந்தி நம்பிக்கை

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில், நாட்டின் இளைஞர்களே ஒன்றை கவனியுங்கள். நரேந்திரமோடியின் நோக்கம் வேலைவாய்ப்பை வழங்குவது அல்ல. புதிய பதவிகளை உருவாக்குவதை தவிர்த்து, காலியாக உள்ள பதவிகளிலும் அவர் அமர்ந்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த தரவுகளை கருத்தில் கொண்டார். 78 துறைகளில் 9,64,000 காலி பணியிடங்கள் உள்ளன.

முக்கியமான துறைகளாக ரயில்வேயில் 2.93லட்சம் பணியிடங்களும், உள்துறை அமைச்சகத்தில் 1.43 லட்சம் மற்றும் பாதுகாப்பு துறையில் 2.64லட்சம் பணியிடங்களும் காலியாக உள்ளது. 15 முக்கிய துறைகளில் 30 சதவீதம் பணியிடங்கள் ஏன் காலியாக இருக்கிறது என்பதற்கு ஒன்றிய அரசிடம் பதில் இருக்கிறதா? பொய் உத்தரவாதப் மூட்டையை சுமந்து வரும் பிரதமரின் அலுவலகத்தில் ஏன் அதிக எண்ணிக்கையில் மிக முக்கியமான பதவிகள் காலியாக இருக்கின்றன?

காலியாக உள்ள பதவிகள் நாட்டின் இளைஞர்களின் உரிமையாகும். அவற்றை நிரப்புவதற்கு உறுதியான திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் மூடிய கதவுகளை திறப்போம் என்பதே இந்தியா கூட்டணியின் முக்கிய தீர்மானம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வேலைவாய்ப்புகளின் மூடிய கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும்: காங். எம்பி ராகுல்காந்தி நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: