×

செந்தில்பாலாஜி வழக்கு ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை நடத்த அனுமதி கிடைக்கவில்லை என மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது. வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் உள்பட 900 பேரை குற்றபத்திரிகையில் சேர்த்துள்ளதால் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல், விசாரணையை ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post செந்தில்பாலாஜி வழக்கு ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Central Crime Branch Police ,Senthil Balaji ,Tamil Nadu government ,Senthilbalaji ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட...