ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.10 லட்சம் கிடைக்கும் சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருது100 பேருக்கு வழங்கப்படுகிறது

 

நாகர்கோவில், மார்ச் 4: தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 2022-23ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெறும் ஆசிரியர்களை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாநில தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கலையரங்கில் வரும் மார்ச் 6ம் தேதி நடைபெற உள்ளது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஊக்கத்தொகை தலா ரூ.10 லட்சம் மற்றும் அப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கிஷோர், கண்ணாட்டுவிளை அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ் பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The post ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.10 லட்சம் கிடைக்கும் சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருது100 பேருக்கு வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.

Related Stories: