மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ரயில் மூலம் மயிலாடுதுறை பயணம்: எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

சென்னை: மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து ரயில் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். அதன்படி, இந்த விழாவில் கலந்துக்கொள்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 4.15 மணிக்கு திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு செல்கிறார்.

அந்தவகையில் இரவு 8.15 மணிக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இரவு தங்குகிறார். இதனையடுத்து நாளை காலை 10 மணிக்கு கார்மூலம் மயிலாடுதுறை சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வை முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் திருச்சி – சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கும் மீண்டும் சென்னை வந்தடைகிறார். முதல்வரின் இந்த ரயில் பயணம் காரணமாக எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ரயில் மூலம் மயிலாடுதுறை பயணம்: எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: