×

சாத்தூர் ஊராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகள்: அமைச்சர் திறந்து வைத்தார்

சாத்தூர், மார்ச் 3: சாத்தூர் ஊராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். சாத்தூர் ஊராட்சி பகுதியில் உள்ள பாப்பாகுடி, நென்மேனி, கத்தாளம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிராம செயலகத்தையும், கத்தாளம்பட்டி, சின்னகொல்லபட்டி ஆகிய கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையின் கட்டிங்களையும் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ் தலைமையில் தமிழ்நாடு வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயண்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார்,வட்டாட்சியர் லோகநாதன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மகேஸ்வரன், காமேஸ்வரி, சாத்தூர் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர் செயலாளர் குருசாமி,மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் திருவேங்கடசாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரைராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் பாக்கியலட்சுமி முருகன் மற்றும் கத்தாளம்பட்டி ஊராட்சி தலைவர் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சாத்தூர் ஊராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகள்: அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chatur-Orati ,Chathur ,Chathur Ramachandran ,Chatururadchi ,Papagudi ,Nenmani ,Kathalampatty ,Matupati ,Chhatur Uradashi ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்.. பிரச்சாரத்தின் போது...