×

தாராபுரத்தில் திமுக அரசின் சாதனை ஸ்டிக்கர்களை வீடுகளின் கதவுகளில் ஒட்டிய அமைச்சர் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்

தாராபுரம், மார்ச் 3: தாராபுரத்தில் திமுக அரசின் சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இல்லங்கள் தோறும் விநியோகித்து ‘ஸ்டாலினின் குரல்’ என்னும் ஸ்டிக்கர்களை கதவுகளில் ஒட்டி பிரச்சாரம் செய்தார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகர திமுக சார்பில் இல்லங்கள் தோறும் சென்று திராவிட மாடல் ஆட்சியின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். தொடர்ந்து, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் 22, 23-ம் வார்டுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இல்லம் தோறும் சென்று சாதனைகளை விளக்கினார். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை அமைச்சர் வழங்கினார். வீடுகளின் கதவுகளில் ஸ்டாலினின் குரல் என்னு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

இந்த துண்டு பிரசுரத்தில், ‘‘தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க ரூபாய் 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030 ம் ஆண்டிற்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். 5 லட்சம் ஏழை குடும்பங்களை கண்டறிந்து வறுமையை அகற்ற முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள், அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும்.

சென்னை, திருச்சி, மதுரை மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் திமுக அரசால் கட்டி தரப்படும். தமிழ்நாட்டில் முதன்முறையாக உலக பூத்தொழில் மாநாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் விண்வெளி தொழில் மற்றும் இந்து சக்தி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 1100 கோடி, மதுரையில் 360 கோடி மற்றும் திருச்சியில் 345 கோடி மதிப்பில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க ரூ.17 கோடி திமுக அரசு ஒதுக்கி உள்ளது’’ என்பது போன்ற அரசின் நலத்திட்டங்கள் விளக்கப்பட்டு உள்ளன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், நகர பொருளாளர் சக்திவேல், கவுன்சிலர்கள் முகமது யூசுப் உட்பட நகர திமுக நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்பிரச்சாரம் தாராபுரம் பகுதியில் பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

The post தாராபுரத்தில் திமுக அரசின் சாதனை ஸ்டிக்கர்களை வீடுகளின் கதவுகளில் ஒட்டிய அமைச்சர் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,DMK government ,DMK ,Adi Dravidian ,Minister ,Kayalvizhi Selvaraj ,Stalin ,Tirupur district ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...