10 இந்திய செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியதற்கு இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் கண்டனம்..!!

டெல்லி: 10 இந்திய செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியதற்கு இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழிகாட்டுதல்களுடன் இணங்காததால், ப்ளே ஸ்டோரில் இருந்து 10 பிரபலமான பயன்பாடுகளை அகற்றும் நோக்கத்தை கூகுள் நிறுவனம் அறிவித்தது. 200,000 க்கும் மேற்பட்ட இந்திய டெவலப்பர்கள் கூகுள் ப்ளே ஆப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் எங்கள் கொள்கைகளுக்கு இணங்குகிறார்கள், எங்களுக்கு பாதுகாப்பான தளம் இருப்பதை உறுதிப்படுத்த உதவுகிறது; இருப்பினும், நீண்ட காலத்திற்கு, பல நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்கள் உட்பட, 10 நிறுவனங்கள், நீதிமன்றத்திலிருந்து இடைக்காலப் பாதுகாப்பைப் பெறுவதன் மூலம் கூகுள் ப்ளேயில் பெறும் அபரிமிதமான மதிப்பிற்குச் செலுத்த வேண்டாம் எனத் தேர்ந்தெடுத்தது.

இந்நிலையில் 10 இந்திய செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியதற்கு இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாரத் மேட்ரிமோனி செயலி, ஜீவன் சாதி, 99 ஏக்கர்ஸ், நாக்ரி, – ஷாதி டாட் காம் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்ஃபோ எட்ஜ், ட்ரூலி மேட்லி உள்ளிட்ட இந்திய செயலிகளையும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. செயலிகள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீக்கப்பட்ட இந்திய செயலிகளை உடனே ப்ளே ஸ்டோரில் சேர்க்க கூகுளுக்கு ஐ.ஏ.எம்.ஏ.ஐ. வலியுறுத்தியுள்ளது.

The post 10 இந்திய செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியதற்கு இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: