×

முத்துப்பேட்டை அருகே கல்வி உதவி தொகை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டு

 

முத்துப்பேட்டை, மார்ச் 1: முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேளாண்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேளாண்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வில் (என்எம்எம்எஸ்) வெற்றி பெற்ற மாணவி அனுஷ்காவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சாந்தி ஷெரின் பொன்னாடை அணிவித்துப் பாராட்டிப் பேசினார். பள்ளியின் ஆசிரியர் ராஜகுமாரன் நினைவுப் பரிசு வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தங்கமணி, உஷா, சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்தியும், அவருக்கு பயிற்சிகள் வழங்கிய ஆசிரியர்களை பாராட்டியும் பேசினர். பள்ளியின் ஆசிரியர்கள் ரோஸ்லெட், சுந்தரமூர்த்தி, சுபா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

The post முத்துப்பேட்டை அருகே கல்வி உதவி தொகை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Pethavelankotakam Panchayat Union Middle School ,Muthupet ,Panchayat Union Middle School ,Bethavelandkotgam ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...