×

ஆயுதப்படை காவலரை தாக்கிய வாலிபர் அதிரடி கைது

வடலூர், மார்ச் 1: வடலூர் அருகே உள்ள கிழக்கு வீணங்கேணி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(30). இவர் கடலூரில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி வடலூர் பேருந்து நிலையம் அருகில் நடந்த பாமக கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காவல் துறை சார்பில், அங்கு இவர் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார். அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த குறிஞ்சிப்பாடி பொட்டவெளி கிராமத்தை சேர்ந்த திருமுருகன் மகன் பரிமேல் அழகன், சக்திவேல் மகன் இளஞ்செழியன், விருப்பாச்சி கிராமத்தை சேர்ந்த கனகவேல் மகன் வசந்தகுமார் ஆகிய 3 பேரும் ஏன் வீடியோ எடுக்கிறாய் என்று கேட்டு தகராறு செய்து பிரபாகரனை அசிங்கமாகதிட்டி, கழி மற்றும் கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின்பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிந்து இளஞ்செழியனை கைது செய்தனர். மேலும் பரிமேல் அழகன், வசந்தகுமார் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

The post ஆயுதப்படை காவலரை தாக்கிய வாலிபர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Vadalur ,Prabhakaran ,East Veenakeni ,Cuddalore ,Bamaga ,
× RELATED சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டால் நடவடிக்கை