×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோகம் கதிர் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் கால் துண்டிப்பு

ஆர்.எஸ்.மங்கலம், பிப். 29: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பிச்சங்குறிச்சி பகுதியில் கதிர் அறுவடை இயந்திரத்தில் சிக்கி இளைஞர் கால் துண்டான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த சுகுமார் மகன் சுரேந்தர் (22). கதிர் அறுவடை இயந்திரத்தின் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் ஆர்.எஸ்.மங்கலம் சோழந்தூர் அருகே பிச்சங்குறிச்சி பகுதியில் வயலில் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென அறுவடை இயந்திரம் பழுதானதால், இயந்திரத்தை நிறுத்தி பழுது நீக்கிய போது எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் அவரது வலது கால் சிக்கி துண்டானது. உடனே ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு முழங்காலுக்கு கீழ் கால் துண்டிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோகம் கதிர் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் கால் துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Mangalam ,R. ,Bichangurichi ,Sukumar ,Surender ,Trichy ,Dinakaran ,
× RELATED மாவட்ட பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்