×

ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா … குடுகுடுப்புக்காரன் வேடம் அணிந்து திமுகவினர் நூதன பிரசாரம்

செஞ்சி, பிப். 28: விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு வஉசி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரத்தை பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் தொடங்கி வைத்து திமுக சாதனைகளை விளக்கி கூறி பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதற்கிடையே தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் குடுகுடுப்புக்காரன் வேடமணிந்து நூதன முறையில் ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா… இந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் சொல்கின்ற எம்.பிக்கு வாக்களியுங்கள் ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா… மேலும் மக்களுக்கு முதலமைச்சர் செய்த பல்வேறு நலத்திட்டங்கள், சாதனைகளையும் எடுத்து கூறி திமுக எம்.பிக்கு வாக்களியுங்கள் என கூறி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்த அநீதிகளை விளக்கி கூறியும் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

The post ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா … குடுகுடுப்புக்காரன் வேடம் அணிந்து திமுகவினர் நூதன பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Jakkamma ,DMK ,Senji ,Municipal council ,president ,Mokhtiyar Ali Mastan ,Tamil Nadu ,chief minister ,5th ,Vausi Street ,Senchi Municipality ,Villupuram North District ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...