×

கடலூர் முதுநகரில் வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்

கடலூர், பிப். 28:கடலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு கடை வைத்திருப்பவர்கள் மாதம் தோறும் மாநகராட்சிக்கு வாடகை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்தும் சீல் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாநகராட்சியில் கடை வாடகை பாக்கி, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி உள்பட ரூ.70 கோடி வரி பாக்கி உள்ளது. இந்நிலையில் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையம் அருகே உள்ள 4 கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் ரூ.2 லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இதை செலுத்த பலமுறை மாநகராட்சி மூலம் நோட்டீஸ் கொடுத்தும் கடை வைத்திருப்பவர்கள் வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின்பேரில், வருவாய் ஆய்வாளர்கள் அசோகன், பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள் வாடகை பாக்கி செலுத்தாத தனியார் நிதி நிறுவனம், பார்சல் சர்வீஸ் நிறுவனம் உள்ளிட்ட நான்கு கடைகளுக்கு சீல் வைத்தனர்.

The post கடலூர் முதுநகரில் வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Dinakaran ,
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்