மல்லிகார்ஜுன கார்கேவுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட செல்வப்பெருந்தகை கடந்த இரு நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேற்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் தமிழக மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post மல்லிகார்ஜுன கார்கேவுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: