ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புக்கு மேலும் 5 ஆண்டு தடை

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டதற்காக ஜம்மு காஷ்மீர் ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில்,’ தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எவரும் இரக்கமற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். பிரதமர் மோடியின் கொள்கையைப் பின்பற்றி ஜம்மு காஷ்மீர் ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடையை ஒன்றிய அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. ’ என்றார். ஜம்மு காஷ்மீர் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு மீது முதலில் 2019 பிப்ரவரி 28ம் தேதி தடை விதிக்கப்பட்டது.

The post ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புக்கு மேலும் 5 ஆண்டு தடை appeared first on Dinakaran.

Related Stories: