சட்டீஸ்கரில் மிசாவில் கைதானவர்களுக்கு மீண்டும் பென்ஷன்: முதல்வர் விஷ்ணு தேவ் சாய் அறிவிப்பு

ராய்பூர்: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டம் – மிசா கொண்டு வரப்பட்டது. இந்த நெருக்கடி சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்ட சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மிசாவில் கைதானவர்களுக்கு ஒருசில மாநில அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. சட்டீஸ்கரில் 1975-77ம் ஆண்டு வரை மிசா சட்டத்தின்கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை ஓய்வூதியம் வழங்கும் வகையில் கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய மாநில பாஜ ஆட்சியில் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இது 2019ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நிறுத்தப்பட்டது. தற்போது சட்டீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தலைமையில் மீண்டும் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சட்டீஸ்கர் பேரவையில் பேசிய முதல்வர் விஷ்ணு தியோ சிங், “மிசாவில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார்.

The post சட்டீஸ்கரில் மிசாவில் கைதானவர்களுக்கு மீண்டும் பென்ஷன்: முதல்வர் விஷ்ணு தேவ் சாய் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: