சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 15,107 பேர் எழுதுகின்றனர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடக்க உள்ள பிளஸ் 2 தேர்வை 15 ஆயிரத்து 107 பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு மார்ச்.1ல் தொடங்கி மார்ச்.22ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 68 அரசுப்பள்ளிகள், 22 அரசு உதவி பெறும் பள்ளிகள், 53 மெட்ரிக் பள்ளிகள் உள்பட 163 அனைத்து வகை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 36 தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 81 தேர்வு மையங்களில், ஆண்கள் 6 ஆயிரத்து 800பேர், பெண்கள் 8 ஆயிரத்து 307 பேர் உட்பட மொத்தம் 15 ஆயிரத்து 107 பேர் பிளஸ்டூ தேர்வை எழுதுகின்றனர். இத் தேர்வு கண்காணிப்பில் 81 முதன்மை கண்காணிப்பாளர்கள், 81 துறை அலுவலர்கள், 25க்கும் மேற்பட்ட வழித்தட அலுவலர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட பறக்கும் படை குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தனித்தேர்வர்களுக்கு மாவட்டத்தில் 6 தேர்வு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 15,107 பேர் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: