×

கடலூரில் பாமக பேனர்கள் அகற்றம்

கடலூர், பிப். 27: கடலூரில் பாமக பேனர்கள் அகற்றப்பட்டதால் மாநகராட்சி ஆணையரிடம் பாமகவினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடலூரில் பா.ம.க சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பிகலந்துகொண்டார். இதனை தொடர்ந்து பா.ம.க. சார்பில் கடலூர் மாநகராட்சி பகுதியில் ஆங்காங்கே அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை வரவேற்று பேனர் வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் அனுமதி இன்றி பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி ஊழியர்கள் பேனர்களை அகற்றினர். தகவல் அறிந்த பாமக மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில், மாநில அமைப்பு தலைவர் பழ. தாமரைக்கண்ணன், மாவட்ட தலைவர் தடா தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், மாணவர் அணி கோபிநாத், விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

பின்னர் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜை நேரில் சந்தித்தனர். அப்போது கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் பேனர் வைத்து வருகின்றனர். ஆனால் பா.ம.க. சார்பில் வைக்கப்பட்ட பேனரை ஊழியர்கள் எப்படி அகற்றினார்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் காந்திராஜ் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அகற்றப்பட்ட பேனர்களை பா.ம.க. நிர்வாகிகள் மீண்டும் வைத்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கடலூரில் பாமக பேனர்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Pamaka ,Cuddalore ,Bamakas ,Bamaka ,BJP ,Vadalur ,B.M.K. ,President ,Anbumani Ramadoss ,Dinakaran ,
× RELATED திமுக, அதிமுக, காங்., பாமக நிர்வாகிகள் வீடுகளில் ஐடி ரெய்டு