×

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட திடலை பார்வையிட்ட ஒன்றிய அமைச்சர்

 

பல்லடம், பிப்.27: பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயண நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று (27ம் தேதி) பல்லடம் மாதப்பூரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான திடல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்று தமிழகம் ஒரு மிகப்பெரிய திருவிழாவை பார்க்க இருக்கிறது. பிரதமர் மோடி பல்லடம் வர உள்ளார். பல்லடத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் என்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு நிகழ்வாக இருக்கும். தமிழக அரசியலையே திருப்பி போடும் நிகழ்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மீண்டும் பாஜ வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட திடலை பார்வையிட்ட ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Modi ,Palladam ,BJP ,president ,Annamalai ,En Man N People walk ,Palladam Madhapur ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...