இடைநிற்றல் மாணவிகள் 15பேர் மீண்டும் பள்ளியில் ேசர்ப்பு

தூத்துக்குடி, பிப்.24: தூத்துக்குடியில் பள்ளிக்கு வராமல் இருந்த 15 மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி ஆணையின்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி வழிகாட்டுதலின் பெயரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் முனியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் 15 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு வராமல் இருந்த மாணவர்களை கண்டுபிடித்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் சார்பில் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து 2 மாதங்களாக 15 மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா மேரி, வட்டார மேற்பார்வையாளர் பார்வதி மற்றும் ஆசிரிய பயிற்றுநர் உள்ளிட்டோர் நேரடியாக சம்பந்தப்பட்ட மாணவிகளின் வீடுகளுக்கு சென்று கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் எடுத்துக்கூறினர். அதனைத்தொடர்ந்து 15 மாணவிகளும் நேற்று மீண்டும் பள்ளிக்கு வருகை புரிந்தனர். அவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்று வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.

The post இடைநிற்றல் மாணவிகள் 15பேர் மீண்டும் பள்ளியில் ேசர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: