×

களக்காடு அருகே கீழக்காடுவெட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

களக்காடு,பிப்.24: களக்காடு அருகே கீழக்காடுவெட்டியில் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு 100 கிலோ பெரிய ரக நெல் ₹2265க்கும், சிறிய ரக நெல் ₹2,310க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் அரசின் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. இதன் திறப்பு விழாவில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜார்ஜ் கோசல், களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதி, ஒன்றிய துணை தலைவர் விசுவாசம், ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் அய்யப்பன், கிருஷ்ணன், கிராம நிர்வாக அதிகாரி செந்தூர், கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் சுரேஷ், திமுக கிளை செயலாளர்கள் பண்டாரம், கொம்பையா கலந்து கொண்டனர்.

The post களக்காடு அருகே கீழக்காடுவெட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Keezakaduvetti ,Kalakadu ,Tamil Nadu Government Consumer Goods Trading Corporation ,Geezalkaduvetti ,
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...