×

செஞ்சி அருகே விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை, பிப். 23: விழுப்பரம் மாவட்டம் மேல்சேவூர் அருகே விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சேவூர்(ம) அம்மன் குளத்துமேடு கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை அரசு பேருந்து சாலை வளைவை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் பிரவீன் குமார் (16) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயராஜு மகன் வீனேஷ் (16) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

The post செஞ்சி அருகே விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Senchi ,Chennai ,Melsevoor ,Villupparam district ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...