×

பீகார் துணை சபாநாயகர் ராஜினாமா

பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த தலைவரான மஹேஸ்வர் ஹசாரி தனது துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இரண்டாவது முறை எம்எல்ஏவான ஹசாரி கல்யான்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2021ம் ஆண்டு மார்ச்சில் இருந்து துணை சபாநாயகர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் தலைவரான முதல்வர் நிதிஷ்குமாருடன் ஆலோசனை நடத்திய பின்னர் தான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

The post பீகார் துணை சபாநாயகர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Bihar ,Deputy Speaker ,Patna ,United Janata Dal ,Maheshwar Hazari ,MLA ,Hazari ,Kalyanpur ,Speaker ,Dinakaran ,
× RELATED அதெல்லாம் செல்ல திட்டு…இதுக்கு போய்...