பாட்னா: பீகாரில் தேர்வில் வினாத்தாள் கசிவு, அரசு போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகாரில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் வினாத்தாள் கசிவு மற்றும் போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து பீகார் பொது தேர்வுகள் 2024 என்ற மசோதாவை மாநில நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி சட்டப்பேரவையில் நேற்று முன்மொழிந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. எனினும் குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபவர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.10லட்சம் அபராதமும் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.
The post வினாத்தாள் கசிவு தடுக்க பீகாரில் புதிய சட்டம் appeared first on Dinakaran.