×

கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த வாலிபரை கொன்ற 5 பேர் சரண்

.

ராமநாதபுரம்:. மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புளியங்குளத்தை சேர்ந்த சிலர், காரில் கடந்த 2012, அக்.30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மதுரை சிந்தாமணி புறக்காவல் நிலையம் அருகே வந்தபோது, கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் புளியங்குளத்தை சேர்ந்த ஜெயபாண்டி, சுந்தரபாண்டியன் உட்பட சிலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலஅனுப்பானடியை சேர்ந்த ராமர் (எ) ராமகிருஷ்ணன் தலைமையில் அனுப்பானடியை சேர்ந்த மோகன், கிளி கார்த்திக் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்று கடந்த 2013ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்களில் ராமர், கிளி கார்த்திக் ஆகியோர் மதுரையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறியதை தொடர்ந்து, 2020 முதல் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். கடந்த 19ம் தேதி கரூர் நீதிமன்றத்தில் ராமகிருஷ்ணனும், கிளி கார்த்திக்கும் ஆஜராகிவிட்டு மதுரைக்கு டூவீலரில் சென்றனர். அரவக்குறிச்சி அருகே தேரப்பாடி பகுதியில் வந்தபோது, திடீரென காரில் வந்த ஒரு கும்பல், டூவீலரை மறித்து, ராமகிருஷ்ணன், கிளி கார்த்திகையும் ஆயுதங்களால் வெட்டியது. இதில் ராமகிருஷ்ணன் தலை துண்டித்து கொடூரமாக கொடூரமாக கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி மதுரை கருப்பாயூரணி சேதுராமன் மகன் வினோத் கண்ணன்(26), கீரனூர் வீரணன் மகன் மகேஷ் குமார்(24), மேலூர் ராமஜெயம் மகன் தனுஷ்(21), ஆண்டார் கொட்டாரம் முருகேசன் மகன் தர்மா(25), ஆண்டார் கொட்டாரம் முருகன் மகன் ரமேஷ் (23) ஆகியோர் நேற்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி அருண் சங்கர் முன்னிலையில் சரணடைந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அந்த 5 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்புடன் 5 பேரும், விருதுநகர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

The post கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த வாலிபரை கொன்ற 5 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : Karur ,court ,Ramanathapuram ,Buliangulam ,Sillaman ,Madurai district ,Pasumpon ,Ramanathapuram district ,Madurai Chintamani outpost ,Karur court ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்