அரசு கலை கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி, பிப். 21: திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாமாண்டு சமூகப் பணித்துறை மாணவர்களின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியில் நடைப்பெற்றது. கல்லூரியின் முதல்வர் மாறன் தலைமை வகித்தார். பிரைட் பீப்புள் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் பிரபாகரன் கலந்துக்கொண்டு நலம் மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் பேசினார். துறைத்தலைவர் ஆனந்தி, உதவி பேராசிரியர் சிலம்பரசி ஆகியோர் கலந்துக் கொண்டனர்/ நிகழ்ச்சியை பிரஸ்னவ் ,லோகேஷ், மனோஜ், யோகேஸ்வரன், மீனா, சிவப்பிரியா, கற்பகம் ஆகிய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

The post அரசு கலை கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: