×

ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி 2 பேரிடம் ₹9.42 லட்சம் மோசடி

புதுச்சேரி, பிப். 18: புதுச்சேரியை சேர்ந்த ரமேஷ் சந்திரசேகர் என்பவரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தெரியாத நபர் கூறியுள்ளார். இதை நம்பி ஆன்லைனில் ரூ.9 லட்சம் ரமேஷ் முதலீடு செய்துள்ளார். அதன்பிறகு, எந்த வருமானமும் வராமல் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். சிவக்குமார் என்பவரின் தந்தை வைத்திருந்த ஏடிஎம் கார்டை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். பின்னர், அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.42 ஆயிரத்தை திருடி சென்றுள்ளார். மேலும், ரமணன் என்பவரின் காதலியின் இன்ஸ்டாகிராம் கணக்கை மர்ம நபர் ஹேக் செய்து, அதில் தவறான செய்திகளை பதிவிட்டுள்ளார். ஜெய் விஜய் மோடி என்பவரின் பெயரில் மர்ம நபர் ஒருவர் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். பின்னர், பேஸ்புக் மூலம் ஜெய் விஜய் மோடியின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மெசேஜ் அனுப்பி பணம் பறிக்க முயன்றுள்ளார். லதா என்பவர் கடன் பெறும் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதில் கடன் எதுவும் வாங்கவில்லை. அதன் பிறகு, தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து பணத்தை திரும்பி செலுத்துமாறு கூறி மர்ம நபர்கள் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி 2 பேரிடம் ₹9.42 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Ramesh Chandrasekhar ,Ramesh ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி டிஜிபியாக ஷாலினி சிங்கை...