மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸின் புதிய நகை ஷோரூம் ஆஸ்திரேலியாவில் திறப்பு: கிரிக்கெட் வீரர் பிரட்லீ தொடங்கி வைத்தார்

சென்னை: சிட்னியில் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸின் பிரமாண்ட நகை ஷோரூமை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட்லீ தொடங்கி வைத்தார். ஆஸ்திரேலியாவின் சிட்னி லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ஹாரிஸ் பார்க்கில் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் மிகப் பெரிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இதை பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ தொடங்கி வைத்தார். இதன் மூலம் முதல் இந்திய பன்னாட்டு நகை விற்பனையாளராக மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

சிட்னியில் புதிய ஷோரூமை தொடங்கியுள்ளதன் மூலம், உலக அளவில் 6வது பெரிய நகை விற்பனையாளரான மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவில் செயல்பட தொடங்கும் முதல் இந்திய சர்வதேச நகை பிராண்டாக வரலாறு படைத்திருக்கிறது. இது 13வது நாட்டில் தடம் பதிப்பதை குறிக்கிறது. தற்போது, இந்த பிராண்ட் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், ஓமன், கேஎஸ்ஏ, பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, யுகே, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 340க்கும் மேற்பட்ட ஷோரூம்களின் வழியாக விரிவான சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

புதிய ஷோரூமை மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸின் நிர்வாக இயக்குநர் இண்டர்நேஷனல் ஆபரேஷன்ஸ் ஷாம்லால் அகமது, நிர்வாக இயக்குநர், இந்தியா ஆபரேஷன்ஸ் ஆஷர் ஓ, பிராந்திய தலைவர் – தூர கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியா அஜித் எம், நிதி – நிர்வாக தலைவர் அமீர் சிஎம்சி, தயாரிப்பு பிரிவு தலைவர் பைசல் ஏ.கே., மலபார் குரூப்யின் தலைமை டிஜிட்டல் அதிகாரி ஷாஜி கக்கோடி, சிட்னி அரசாங்கத்தின் பிரதிநிதிகள், மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸின் மற்ற மூத்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சிட்னி மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸின் புதிய விற்பனை நிலையத்தில் 18 காரட், 22 காரட் தங்கம் மற்றும் வைர நகைகளுடன் திருமண ஆபரணங்கள், தினசரி அணியும் ஆபரணங்கள் மற்றும் அவ்வப்போது அணியும் நகைகள் என 30,000க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளும், தனி பயனாக்கப்பட்ட நகை வடிவமைப்பு வசதியும் உள்ளன.

The post மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸின் புதிய நகை ஷோரூம் ஆஸ்திரேலியாவில் திறப்பு: கிரிக்கெட் வீரர் பிரட்லீ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: