நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டுமான பணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள காந்திநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பிஜ்ஜால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்த பணியில் கடந்த சில நாட்களாக 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுவந்தனர். புதிய வீட்டுக்கான கழிவறை அமைக்கும் பணியில் 7 பெண்கள் உட்பட 8 கட்டுமான பணியாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் பக்கவாட்டு பகுதியில் மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது பழைய கழிவறை இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டு பணியாளர்கள் மீது விழுந்தது.
இதில் 8 பேர் மண் சரிவில் சிக்கினர். பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறை மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர். 8 பேரையும் மீட்டனர். இருப்பினும் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கட்டுமான பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கட்டட உரிமையாளர் பிரிட்ஜோ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேஸ்திரிகள் ஜாஹிர் அகமது, ஆனந்தராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post உதகையில் கட்டுமான பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது appeared first on Dinakaran.