போக்குவரத்து விழிப்புணர்வு

 

மதுரை, பிப். 7: மதுரையில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தெற்குவாசல், தெப்பக்குளம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மன அழுத்த மேலாண்மை குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சரியான உரிமம் இன்றி வாகனம் இயக்குதல், கவனக் குறைவாக வாகனம் இயக்குதல் போன்றவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தங்கள் குடும்பத்துடன் நேரத்தை பகிர்ந்து நலமுடன் வாழ்வது குறித்தும் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு அளித்தனர்.

The post போக்குவரத்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: