கொட்டும் கனமழை.. சென்னை முதல் குமரி வரை தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

சென்னை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய தமிழக கடலோரத்தில் வளி மண்டல காற்று சுழற்சி நீடித்து வருகிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காற்றின் திசை மாறுபாடு காரணமாக தற்போது அது வலுப்பெற வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பள்ளிகள் அல்லது கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்

மதுரை

சிவகங்கை கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு திருவண்ணாமலை நாமக்கல்காஞ்சிபுரம் திருவள்ளூர்பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்சென்னை கன்னியாகுமரி கடலூர் மயிலாடுதுறை நாகை தஞ்சை பெரம்பலூர் திருச்சி தேனி திண்டுக்கல் அரியலூர் விருதுநகர் புதுக்கோட்டை தூத்துக்குடி நெல்லை தென்காசி விழுப்புரம்

திருவாரூர்
ராமநாதபுரம்
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26-11-2021) மற்றும் நாளை(27-11-2021) விடுமுறை

The post கொட்டும் கனமழை.. சென்னை முதல் குமரி வரை தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! appeared first on Dinakaran.

Related Stories: