தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்ப முடிவு: வரும் 9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள 1,933 பணியிடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு, தகுதியான நபர்கள் //tnmaws.ucanapply.com என்ற வலைதளம் வாயிலாக பிப்.9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம். உதவிப் பொறியாளர் (மாநகராட்சி)- 146, உதவிப்பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல்)-145, உதவிப் பொறியாளர் (நகராட்சி)- 80, உதவிப் பொறியாளர் (சிவில்)-58, உதவிப் பொறியாளர் (மெக்கானிக்கல்)-14, உதவிப் பொறியாளர் (எலக்ட்டிரிக்கல்)-71, உதவிப் பொறியாளர் (திட்டம்) மாநகராட்சி-156, நகரமைப்பு அலுவலர் (நிலை-II) உதவிப்பொறியாளர் (திட்டம் ) நகராட்சி-12, இளநிலை பொறியாளர்-24, தொழில் நுட்ப உதவியாளர்- 257, வரைவாளர் (மாநகராட்சி)- 35, வரைவாளர் (நகராட்சி)-130, பணி மேற்பார்வையாளர்-92, நகர ஆய்வாளர் மற்றும் இளநிலை பொறியாளர் (திட்டம்)-367, துப்புரவு ஆய்வாளர் (மாநகராட்சி மற்றும் நகராட்சி)- 244 ஆகிய காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணி ஆய்வாளர் பணிக்கு ரூ.18,200 முதல் ரூ.67,100 வரையும், மற்ற பணிகளுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரையிலும், ரூ.37,700 முதல் ரூ.1,38,500 வரையும் சம்பளம் கிடைக்கும். தேர்வுகள் ஜூன் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறும்.

The post தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்ப முடிவு: வரும் 9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: