பொன்மார் ஊராட்சியில் ரூ.1.2 கோடி மதிப்பில் திட்ட பணிகள்: ஒன்றிய குழு தலைவர் அடிக்கல்

திருப்போரூர்: பொன்மார் ஊராட்சியில் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய பொன்மார் ஊராட்சியில், ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம், ரூ.21 லட்சம் மதிப்பில் போலச்சேரி பகுதியில் புதிய சிமென்ட் சாலை, மலைத்தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை,

கங்கோத்ரி குடியிருப்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை, செல்லியம்மன் நகர் பகுதியில் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, மலைத்தெருவில் ரூ.40 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

பொன்மார் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநாராயணன் தலைமை தாங்கினார். இதில், ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் கலந்துகொண்டு, பொன்மார் ஊராட்சியில் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொன்மார் ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ், ஊராட்சி துணை தலைவர் வெங்கடேசன், திமுக செயற்குழு உறுப்பினர் அன்புச்செழியன், ஒன்றிய துணை செயலாளர் வெண்பேடு ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலர் காளீஸ்வரி நன்றி கூறினார்.

The post பொன்மார் ஊராட்சியில் ரூ.1.2 கோடி மதிப்பில் திட்ட பணிகள்: ஒன்றிய குழு தலைவர் அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: