ரூ.18 லட்சம் செலவில் பொய்கை ஆழ்வார் குளம் சீரமைப்பு

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்தில், தனியார் நிறுவனம் சார்பில், ரூ.18 லட்சம் செலவில் பொய்கை ஆழ்வார் குளம் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியது. சின்ன காஞ்சிபுரம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ யதோத்தகாரி பெருமாள் கோயிலுக்கு, சொந்தமான பொய்யா குளம் என அழைக்கப்படும் பொய்கை ஆழ்வார் குளம் உள்ளது. இக்குளம் முழுமையாக சேதமடைந்து செடி, கொடிகள் வளர்ந்து பாசிப்படர்ந்தும், சுற்று சுவர்கள் இடிந்து காணப்படுகிறது.

இதனால், சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் இப்பொய்கையாழ்வார் குளத்தினை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், சென்னை பெட்ரோபேக் ஆயில் அண்ட் கேஸ் நிறுவனம், எக்ஸ்னோரா இயற்கை சூழல் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து, சுமார் ரூ.18 லட்சம் செலவில் குளத்தினை தூர்வாரி, படிக்கட்டுகளை சீரமைத்து, சுற்றுசுவர்களை அமைக்க முடிவுசெய்யப்பட்டு, அப்பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி பொய்கை ஆழ்வார் குளக்கரையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெட்ரோபேக் ஆயில் அண்ட் கேஸ் நிறுவன சிஎஸ்ஆர் ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, எக்ஸ்னோரா இயற்கை சூழல் பாதுகாப்பு அமைப்பு சிஎஸ்ஆர் சி.ஹெட் ராதா, யதோத்தகாரி பெருமாள் கோயில் பரம்பரை தர்மகர்த்தா நல்லப்பநாராயணன், ஸ்ரீநாத், 20வது வட்ட மாமன்ற உறுப்பினர் அகிலா தேவதாஸ், தேவதாஸ், 23வது வட்ட மாமன்ற உறுப்பினர் புனிதா சம்பத், கோடிகார் சீனிவாசன், பசுமை இந்தியா அமைப்பு பசுமை மேகநாதன், எனோரா பிராஜெக்ட் எஞ்ஜினியார் கே.நடராஜன், எனோரா பிராஜெக்ட் எஞ்ஜினியார் பிரவீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ரூ.18 லட்சம் செலவில் பொய்கை ஆழ்வார் குளம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: