கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

 

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ரூ.400 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 30ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ. நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. ஆகாய நடைபாதை அமைக்கும் பணியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. பிப்ரவரி 14-ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: